ada
இலங்கைசெய்திகள்

பரிந்துரைகளை முன்வைக்குக! – ஜனாதிபதி

Share

நாட்டை திறப்பதற்கு உரிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அனைத்து பிரிவுகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்ரோபர் மாதம் 1ஆம் திகதி தளர்த்துவதற்கு உரிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய பரிந்துரைகள் முன்வைக்குமாறு அரசு அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய சுகாதார, போக்குவரத்து மற்றும் ஏனைய பிரிவுகளால் இந்த பரிந்துரைகள் வழங்கப்படவுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு மீள திறக்கப்பட்டாலும் வழங்கப்படவுள்ள சுகாதார வழிகாட்டல்களை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 16
செய்திகள்உலகம்

இலங்கை கடற்பரப்பில் பலியான 84 ஈரானிய வீரர்கள்: தெஹ்ரானில் மாபெரும் இறுதிச் சடங்கிற்கு ஜனாதிபதி அழைப்பு!

இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் அமெரிக்க கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படை வீரர்களின் இறுதிச்...

14 16
உலகம்செய்திகள்

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் முதல் உத்தரவு: ஆட்சி அதிகாரத்தில் மாற்றமில்லை!

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமேனி, தனது தந்தை அயத்துல்லா அலி கமேனியின்...

12 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதன்கிழமை விடுமுறை ஏன்? – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை முகாமைத்துவம் செய்யும் நோக்கில், நாளை...

11 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஒரு அடையாள அட்டைக்கு ஒரு QR மாத்திரமே: டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் புதிய கட்டுப்பாடு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ள எரிபொருள் QR முறைமையின் கீழ், ஒரு தேசிய அடையாள...