katunayake airport
இலங்கைசெய்திகள்

பிரதான கணினிகள் செயலிழப்பு! – கட்டுநாயக்கவில் பொலிஸ் பாதுகாப்பு

Share

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் வருகைதரும், வெளியேறும் பிரிவுகளின் கணினிகள் செயலிழந்து உள்ளன. இன்று (09) காலை 9 மணியளவில் திடீரென செயலிழந்துவிட்டன என திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் விமான நிலையத்தின் விமானப் பயணிகளால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, Manual System ஊடாக பதிவுகள் ​மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால் தங்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரதான காரியாலயத்துக்கு வருகைதரும் விமானப் பயணிகள், அமைதியற்ற முறையில் நடந்​து கொள்கின்றனர்.

இதனையடுத்து அந்தப் பிரிவுக்குள் பொலிஸார் அழைக்கப்பட்டு, பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்துக்குள் செயலிழந்துள்ள கணினிகளை சீர்செய்வதற்கான முயற்சிகளில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்தின் கணினிகள் நேற்று (08) செயலிழந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...

ordinary
இலங்கை

வரலாற்று சாதனை படைத்த இலங்கை மருத்துவர்கள்!

  கண்டி, பேராதனை போதனா வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இடுப்புப் பகுதியில் இணைந்திருந்த இரட்டையர்களை...

veppam 1
இலங்கை

வடக்கு கிழக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான ‘வெப்பக் குறியீடு’, இன்று பகல் வேளையில் குறிப்பிட்ட சில...

sri lankas president
இலங்கை

மீண்டும் சந்தித்த கோட்டா மற்றும் ரணில்!

முன்னாள் ஜனாதிபதிகளாக கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் கொழும்பில்...