sunshine coast filling up car
இலங்கைசெய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு!!!

Share

நாட்டில் ஆங்காங்கே பல்வேறு குழுக்களின் எதிர்ப்பு மற்றும் சிலரது கட்டுக்கடங்காத மோசமான செயற்பாடுகள் காரணமாக நாட்டில் மொத்தம் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்களை சிலர் மிரட்டுவதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவோதுன்ன தெரிவித்தார்.

அதன்படி இந்த நிரப்பு நிலையங்களுக்கான அனைத்து எரிபொருள் வழங்கல்களும் இரத்துச் செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இவ்வாறான மிரட்டல் மற்றும் மோசமான கட்டுக்கடங்காத செயல்கள் தோன்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மீது ஐந்து தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக நாவோதுன்ன மேலும் தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகம் சீராக நடைபெற பொதுமக்கள் ஆதரவு அளிக்காவிட்டால், மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கவலை வெளியிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...