gover
அரசியல்இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் – அரச ஊழியர்கள் சிக்கலில்

Share

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்த அரச ஊழியர்களின் சம்பள இழப்பினால் அவர்களது குடும்பங்கள் தற்போது அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் காமினி வலேபொட ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளனர்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவாவுக்கு அனுப்பிய கடிதத்திலேயே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்த அரச சேவையில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நியாயமான தீர்வை விரைவாக நடைமுறைப்படுத்த பொது நிர்வாக  அமைச்சுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் என்பதை உறுதிப்படுத்த முடியாவிட்டால் இந்த அதிகாரிகள் இதுவரை பெற்ற ஒருங்கிணைந்த சம்பளத்தில் நியாயமான சதவீதத்தை மார்ச் 9 முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தல் தினம் வரை அனைத்து வகையான கடன்கள் மற்றும் சம்பளத்தில் வசூலிக்கப்படும் வட்டியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...

குருவிட்ட
இலங்கை

குருவிட்ட, பல்லன்சேன சிறைச்சாலைகளின் அமைதியின்மை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகள்.

இன்றைய தினம் குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பல்லன்சேன திறந்தவெளி சிறை முகாமில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து...

death body 1
இலங்கை

மெகசின் சிறைச்சாலையில் உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித்தகவல்கள்.

நேற்றைய தினம் இரவு, கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த கைதி...