24 667384a833b24
இலங்கைசெய்திகள்

அடர்ந்த காட்டுப்பகுதியில் கைது செய்யப்பட்ட தாய் மற்றும் மகள்: விசாரணையில் தகவல்

Share

அடர்ந்த காட்டுப்பகுதியில் கைது செய்யப்பட்ட தாய் மற்றும் மகள்: விசாரணையில் தகவல்

பேராதனை, போவல பிரதேசத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் பாரியளவிலான கசிப்பு காய்ச்சிவந்த தாய் மற்றும் மகளை கண்டி பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று சுற்றிவளைத்துள்ளது.

இதன்போது 200 கசிப்பு போத்தல்கள் மற்றும் 1250 லீற்றர் கோடாவுடன் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 48 வயதுடைய தாயும் அவரது 26 வயது மகளும் கசிப்பு கடத்தல் தொடர்பில் இதற்கு முன்னரும் பல தடவைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் அடிக்கடி சோதனைகளை மேற்கொள்வதால் பேராதனை போவல பேருந்து வீதியில் இருந்து சுமார் 1 1/2 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கசிப்பு காய்ச்சல்களை நடத்தி வந்துள்ளனர்.

கண்டி பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரைக்கமைய, மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்கவின் மேற்பார்வையில் பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலையத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் திலக் சமரநாயக்க உள்ளிட்ட குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்

Share
தொடர்புடையது
Fire Breaks
இலங்கை

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.

  களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை சுமார் 8.30...

Prison Clash All Suspects Identified
இலங்கை

மோதலில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர் – மேலதிக நடவடிக்கைகளுக்கு தயாராகும் சிறை அதிகாரிகள்.

  நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன்...

Disappearance
இலங்கை

விடுதலை புலிகளின் பெயரில் கடத்தல் மற்றும் கப்பம் பெறல் – கொழும்பில் நடந்த சம்பவங்கள்.

முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின்...

Retirement
இலங்கை

ஓய்வு வயது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்!

  ஓய்வுபெறும் வயதில் மாற்றம் செய்வது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் தற்போது பெறப்பட்டு வருவதோடு,...