சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்றைய தினம் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழ் ஊடக அமையத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். ஊடக அமையத்தின் முன்றலில் இன்றைய தினம் மதியம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதன் போது , ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஊடகவியலாளர்களால் கோஷங்கள் எழுப்பட்டன.


#srilankaNews
Leave a comment