thirukkethishwaram
இலங்கைசெய்திகள்

திருக்கேத்தீச்சர ஆலய திருப்பணி சபையினருக்கு யாழ் விருது

Share

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகாரக்குழு வழங்கி கௌரவிக்கின்ற யாழ் விருது இந்த ஆண்டு திருக்கேத்தீச்சர ஆலய திருப்பணி சபையினருக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவினரால் நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவினை முன்னிட்டு வெளியிடப்படும் நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழா நாளை நாவலர் மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையில் அவ் விழாவில் வைத்து இவ் விருதும் வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவினரால் சைவத்திற்கும் தமிழுக்கும் சமூகத்திற்கும் தொண்டாற்றியவர்களைக் கௌரவித்து ‘ யாழ் விருது’ வருடா வருடம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இவ்வாண்டு ஈழத்தின் வரலாற்று சிறப்புமிக்க, சமய குரவர்களின் பாடல் பெற்ற, சிவத்தலமான, திருக்கேதீச்சர ஆலய கும்பாபிஷேகப் பணிகளினை ஆற்றி ஈழத்தில் சைவ சமயம் மறுமலர்சியுற துணை செய்து இறைபணி புரிந்த திருக்கேத்தீச்சர ஆலய திருப்பணிச் சபையினருக்கு யாழ் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...