555
இலங்கைசெய்திகள்

வீடு புகுந்து தாக்குதல்! – அடம்பனில் சம்பவம்

Share

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட விடத்தல் தீவு, 5 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 15 பேர் கொண்ட குழு ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

நேற்று மாலை 6.30 மணியளவில் மதுபோதையில் அத்துமீறி நுழைந்த சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் குறித்த வீட்டில் உள்ளவர் அனைவரையும் சரமாரியாகத் தாக்கி தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் வீட்டின் உரிமையாளர் அன்டரி ஜோசப் (வயது–44) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் அருகில் உள்ள பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வீட்டிலுள்ள 18 வயதுடைய இதயநோய் உள்ள பெண் ஒருவரும் 15 வயதுடைய சிறுமியும் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அடம்பன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...