இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது.
இலங்கையில் நடைபெறவுள்ள ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளை காலை கொழும்பு வருகின்றார்.
கொழும்பு விஜயத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட கட்சிகளுடன், அவர் பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாரத பிரதமருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கூட்டு கடிதம், அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்திய தூதுவருடன் கூட்டமைப்பு பேச உள்ளது என தெரியவருகின்றது.
#SriLankaews
Leave a comment