image dbfd1c11a7
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்திய மீனவர்கள் அத்துமீறல் மீண்டும் அதிகரிப்பு!!

Share

யாழ்ப்பாண கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறல் மீண்டும் அதிகரித்துள்ளதாக யாழ், மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சங்கத் தலைவர் ஸ்ரீகந்தவேள் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள சங்க அலுவலகத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நெடுந்தீவு தொடக்கம் நைனா தீவு, எழுவைதீவு, அனலதீவு, மாதகல், பருத்தித்துறை, வடமராட்சி வரை இந்திய மீனவருடைய ஆதிக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது.

இழுவை மடி ஊடாக எமது தொழிலாளர்களுடைய சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.  கடந்த வாரம் 100 தொடக்கம் 150 வரையிலான படகுகள் கரை அளவுக்கு வந்து தொழிலாளர்களுடைய சொத்துக்களை நாசம் செய்துள்ளன.

கோவளம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் உடைய வலைகள் அறுக்கப்பட்டு சொத்துக்கள்  நாசம் செய்யப்பட்டுள்ளன.

இதனை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சரும் அரசாங்கமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...