செய்திகள்உலகம்

மியன்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ஒரே நாளில் இருமுறை அதிர்ந்ததால் மக்கள் அச்சம்!

Share

மியன்மாரில் இன்று மாலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முதல் நிலநடுக்கம் இலங்கை நேரப்படி மாலை 4:13 மணி ரிச்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவானது.

நிலப்பரப்பிலிருந்து சுமார் 60 கி.மீ. ஆழத்தில் இந்த அதிர்வு உருவானது.

22.61 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 93.73 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை பகுதியில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.

மாலை 4:24 மணி (முதல் அதிர்வு ஏற்பட்ட 11 நிமிடங்களில்) ரிச்டர் அளவுகோலில் 3.5 ஆகப் பதிவானது.

குறைந்த அளவிலான நிலநடுக்கங்கள் என்பதால், உயிர்ச் சேதங்களோ அல்லது பாரிய கட்டடப் பாதிப்புகளோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. எனினும், குறுகிய இடைவெளியில் பூமி அடுத்தடுத்து அதிர்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...