டிட்வா (Didwa) சூறாவளியின் கோரத்தாண்டவத்தால் வீடுகளை முற்றிலுமாக இழந்த குடும்பங்களுக்குப் புதிய வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் பாரிய திட்டத்தை அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருகின்றது. இத்திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பத் தேவையான நிலத்தை நன்கொடையாக வழங்குவதற்குத் தயாராகவுள்ள கொடையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட எந்தவொரு குடிமகனையும் பின்தங்க விடாமல், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்பை விட உயர்த்துவதே ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ (Rebuilding Sri Lanka) திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
நாடு முழுவதும் உள்ள நில உரிமையாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இந்தப் புனிதமான நோக்கத்தில் கைகோர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலதிக தகவல்களை www.rebuildingsrilanka.gov.lk என்ற வலைத்தளத்திலோ அல்லது 1800 என்ற தொலைபேசி எண்ணை அழைப்பதன் மூலமோ பெறலாம்.
மேலும் நில நன்கொடையாளர்கள் பற்றிய தகவல்களை 0112331246 என்ற தொலைநகல் எண்ணுக்கும் அனுப்பலாம்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிலையான வாழ்விடத்தை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்படும் இந்த தேசியப் பணியில் அனைவரையும் தீவிரமாகப் பங்கேற்குமாறு அரசாங்கம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.