23 6499669926e1c
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வலுக்கும் நெருக்கடி – நிபந்தனையுடன் களமிறங்கிய இந்தியா..!

Share

அடுத்த மாதம் (ஜூலை) இந்தியா செல்லவுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற வாக்குறுதியை அவரது விஜயத்துக்கு முன்னதாகவே இந்தியா எதிர்பார்க்கின்றது என்று அறியமுடிகின்றது.

அவரது விஜயத்துக்கு முன் மாகாண சபைத் தேர்தல் உட்பட பல நிபந்தனைகளுக்கு ரணில் உடன்பட வேண்டி வரும் என்று இந்திய தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தகவல் இந்தியத் தரப்பால் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநர் பஸில் ராஜபக்சவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா அழுத்தம் 

இதையடுத்தே பஸில் ராஜபக்ச ‘மொட்டு’வின் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களை பத்திரமுல்லை காரியாலயத்துக்கு அழைத்து இது தொடர்பில் பேசியுள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ரணிலுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவுள்ளது.

அது தொடர்பான நிபந்தனைக்கு அவர் இந்தியா செல்லும் முன்பே உடன்பட வேண்டி வரும். இந்தியா இதையே எதிர்பார்க்கின்றது என்று பஸில் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குப் பணம் இல்லை என்று கூறி வரும் ரணில் அரசு இதே காரணத்தை இந்தியாவிடம் கூறி மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் நடத்தியே ஆகவேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்தியா களமிறங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...