arrest police lights scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சட்டவிரோத மண் கடத்தல்! – சாரதி கைது

Share

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தை வட்டுக்கோட்டை பொலிஸார் மடக்கி பிடித்து , சாரதியையும் கைது செய்துள்ளனர்,

சுழிபுரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு அருகில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மணலுடன் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரத்தையும் அதன் சாரதியையும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று சாரதியிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, பொன்னாலை தொடக்கம் சுழிபுரம் சவுக்கடி மற்றும் புளியந்துறை ஆகிய இடங்களில் தொடர்ந்து இரவு வேளைகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும், இவ்வாறான அத்துமீறிய இயற்கை வள அழிப்பை தடுத்து நிறுத்துமாறு கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற வலி.மேற்கு பிரதேச சபைக் கூட்டத்தில் பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசா வாய்மொழி மூல கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.

குறித்த சட்டவிரோத சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு பொன்னாலைக்கும் சம்பில்துறைக்கும் இடையே பொலிஸ் காவலரண் ஒன்றை அமைக்குமாறும் பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...