299891139 377882781175051 6385439808096997171 n
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி! – 6 படகுகளுடன் 8 மீனவர்கள் கைது!

Share

முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் ஒளிபாய்ச்சி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 6 படகும் 8 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டு வருவதாக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகள் நேற்று(15) இரவு ஈடுபடுடிருந்தனர்.

இதன்போது முல்லைத்தீவு கடலில் தடைசெய்யப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையில் ஒன்றான கடலுக்குள் ஒளிபாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கொக்கிளாய் கடற்பரப்பில் மூன்று படகுகளும், மாத்தளன் கடற்பரப்பில் ஒரு படகும், வலைஞர்மடம் கடற்பகுதியில் இரண்டு படகுகளும் என மொத்தமாக 6 படகுகளுடன் 8 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்ட நபர்களையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களம் ஈடுபட்டுள்ளது.

299744369 377882844508378 1458426986555309898 n

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...