யாழ்.செட்டித்தெரு வீதிப் புனரமைப்பை முறையாக மேற்கொள்ளாததால் அதனை Lux ஹோட்டல் உரிமையாளர் தடுத்து நிறுத்தியுள்ளார்.
செட்டித்தெரு வீதிப் புனரமைப்பில் ஈடுபட்டவர்கள் LUX ஹோட்டலுக்கு முன்னால் உள்ள சிமெந்து தரையை உடைத்ததுடன் முன்னே நெருப்பு மூட்டி தாரை எரித்துள்ளர்.

அந்தப் புகையானது, ஹோட்டல் சுவரில் படிந்ததாலும், ஹோட்டல் அருகில் சிமெந்து போட்டிருந்த தரையை உடைத்து விட்டு வீதிக்குள் அடக்காததாலும், ஹோட்டல் வாசலின் அரைவாசியில் வீதிப்புனரமைப்பை நிறுத்தியதாலும், விசனம் அடைந்த ஹோட்டல் உரிமையாளர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளார்.

அத்துடன் தார் எரித்த நெருப்பையும் தண்ணீர் பாய்ச்சி நெருப்பை அணைத்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு நேரில் வந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் சிறீகரன் வீதிப் புனரமைப்பை இடைநிறுத்தினார்.
Leave a comment