ranjith
அரசியல்இலங்கைசெய்திகள்

தேர்தலை நடத்துங்கள்! – ரஞ்சித்

Share

தேர்தல் ஒன்றை நடத்தி மக்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

குறைந்த வருமானத்தை பெறும் நாடாக இலங்கையை மாற்றிய அனைவரும் தங்களதுப் பதவிகளில் இருந்து விலகிச் செல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை இரத்தாகியுள்ளது. என​வே, மக்கள் ஆணையை மீள கோர வேண்டும். தேர்தலைக் காலந்தாழ்த்தினால் என்ன நடக்கும் என மக்கள் பாடமெடுத்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

உரிய தினத்தில் தேர்தலை நடத்தாவிட்டால் அதற்கு எதிராக பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வௌியிலும் போராட்டங்களை மேற்கொள்ளவும், சர்வதேசத்துக்கு செல்லவும் எதிர்க்கட்சிகள் கூட்டாகத் தீர்மானித்தள்ளன என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...