download 4 1
இலங்கைசெய்திகள்

லிட்ரோ எரிவாயுவின் அதிகூடிய விலை குறைப்பு !

Share

12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பை இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ள லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை 3738 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு 402 ரூபாவால் குறைக்கப்படுகிறது. எனவே அதன் புதிய விலை 1,502 ரூபா ஆகும்.

2.3 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு 183 ரூபாவால் குறைக்கப்படுவதால் அதன்ப புதிய விலை 700 ரூபா ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் உள்நாட்டு எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

உலக சந்தையில் எரிவாயு விலை வீழ்ச்சி மற்றும் ரூபாயின் மதிப்பு வலுவடைந்தமை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் விலை குறைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

புதிய விலைகள் இன்று அறிவிக்கப்படும் எனவும், வரலாற்றில் லிட்ரோ எரிவாயுவின் அதிகூடிய விலை குறைப்பு இதுவாகும் எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...