kovil 1
இலங்கைசெய்திகள்

சுகாதார விதி மீறிய கும்பாபிஷேகம்! – மேலும் 25 பேருக்கு தொற்று

Share

ஊரடங்கு வேளையில் சுகாதார விதிமுறைகளை மீறி இடம்பெற்ற கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட மேலும் 25 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா – நொச்சிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி இடம்பெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்ட 13 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து அவர்களுடன் தொடர்புகளை பேணிய 30 வீடுகள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனை முடிவுகள் வெளியான நிலையில் மேலும் 25 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தக் கிராமத்தில் சுமார் 100 பேர் வரையில் வசித்துவரும் நிலையில் மொத்தமாக 38 பேர் தொற்றாளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர். இதனால் குறித்த கிராமம் அச்சுறுத்தல் மிக்கதாக மாறியுள்ளது. சுகாதார நடைமுறைகளை அவதானமான பேணுமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...