ஹரின் பெர்னாண்டோ
அரசியல்இலங்கைசெய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ஹரின் விலகல்!

Share

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கட்சியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.

இன்று மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தனது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனவும், தற்போது சுயாதீனமாக நாடாளுமன்றில் செயற்படவுள்ளார் எனவும் ஹரின் பெர்னாண்டோ எம்.பி. ஊடகங்களிடம் கூறினார்.

இன்று மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் மிகவும் சூடுபிடித்தது.

நாட்டில் நிலவும் அராஜக நிலையைப் போக்குவதற்கு கட்சி என்ற ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் பலரும் கட்சித் தலைவரிடம் யோசனை தெரிவித்துள்ளனர்.

எனினும், கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடமிருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை.

இதேவேளை, இந்தக் காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கட்சியை விட்டு விலகுகின்றார் என்று கட்சித் தலைவரிடம் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளின் பின்னணியில் அவர் அக்கட்சியை விட்டு விலகுகின்றார் என்று தெரியவந்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...