கோட்டாபய 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

நிர்வாக பொறிமுறையை பேண ஒத்துழையுங்கள்! – ஜனாதிபதி கோரிக்கை

Share

” ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய அரசை ஸ்தாபித்து, நாட்டில் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்திய பின்னர், இது சம்பந்தமாக பேச்சு நடத்தி, நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.”

இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு இன்று ஆற்றிய உரையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் உரையில் முக்கிய அம்சங்கள் வருமாறு,

  • இவ்வாரத்துக்குள் புதிய அரசு ஸ்தாபிக்கப்படும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள அதேபோல மக்களின் நம்பிக்கையை வெல்லக்கூடிய ஒருவரை பிரதமராக்கி, புதிய அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அதன்பின்னர் நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கக்கூடிய வகையில் ’19’ ஐ மீள அமுலாக்கும் வகையில் அரசமைப்பு மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும்.
  • ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை முன்வைத்துள்ளனர். புதிய அரசு, நாட்டில் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்திய பின்னர், அந்த கோரிக்கை தொடர்பில் பேச்சு நடத்தி, தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், அரச நிர்வாக பொறிமுறையை செயற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு தாருங்கள்.#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...