மனித புதைகுழி!! அச்சத்தில் தமிழர்கள்
இலங்கைசெய்திகள்

மனித புதைகுழி!! அச்சத்தில் தமிழர்கள்

Share

மனித புதைகுழி!! அச்சத்தில் தமிழர்கள்

1984 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிகின்ற வரைக்கும் இலங்கை இராணுவத்தினருடைய முழுமையான ஆக்கிரமிப்பு பிரதேசமாக இருந்த கொக்குத்தொடுவாய் பகுதியிலே பாரிய மனிதப் புதைகுழி கண்டெடுக்கப்பட்டதென்பது தமிழ் மக்கள் மத்தியிலேயே பாரிய அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் நேற்று(13.07.2023) விசேட கலந்துரையாடலில் பற்கேற்ற பின் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிகையில்,“யுத்தம் முடிந்த காலப்பகுதியில் வட்டுவாகலில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் சரணடைந்த பெருமளவானவர்கள் இராணுவத்தினரின் பேருந்துகளில் ஏற்றப்பட்டு இவ்வாறான பிரதேசங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்ற செய்தி அந்த நாளில் இருந்தே வெளிவந்துகொண்டிருந்தது.

அவ்வாறான நிலைமையில் இந்த புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பாரிய பதற்றத்தை எல்லோர் மத்தியிலும் ஏற்படுத்தி இருக்கிறது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் அரசியல் தரப்புகள் எல்லாம் இந்த அகழ்வானது சர்வதேச நியமங்களுக்கு அமைய சர்வதேச கண்காணிப்பின் கீழ் அகழ்வுப் பணிகள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எங்களை பொறுத்தவரையில் உள்நாட்டிலே இலங்கை அரசாங்கம் மேற்கொள்கின்ற அகழ்வுகள் மூலமாக தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பது தான் எங்களுடைய அனுபவமாக இருக்கிறது.

அந்த வகையிலே, எமது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த வாரம் நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக வலியுறுத்தி இருக்கின்றார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் அந்தப் பகுதி ஒப்படைக்கப்பட்டு அவர்களுடைய மேற்பார்வையிலேயே அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் வலியுறுத்தி இருக்கின்றார்”என கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...