gotta
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு! – கோட்டாவின் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா

Share

இந்தியாவுக்கு செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டில், மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி நாடெங்கிலும் போராட்டங்கள் வெடித்தன.

தொடர் போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில், கடந்த 9 ஆம் திகதி மிகப்பெரும் மக்கள் போராட்டம் வெடித்தது. இந்த நிலையில், இரவோடு இரவாக மாலைதீவு சென்ற கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்.

இருப்பினும் அங்கு அவருக்கு புகலிடம் வழங்கப்படவில்லை எனவும், சாதாரண மக்களுக்கு வழங்கப்படுவது போல் 15 நாட்கள் தங்குவதற்கான சாதாரண விசாவே வழங்கப்பட்டுள்ளது எனவும் சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது கோட்டாபய இந்தியா செல்வதற்கான அனுமதியை வழங்கக் கோரி இந்திய அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார் எனவும், அந்தக் கோரிக்கையை இந்திய அரசு மறுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#India #SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...