Fisherman01
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விடுவிக்கப்படாத பகுதிகளை விடுவிக்குக: மக்கள் கோரிக்கை!

Share

இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இந்தியத் தூதரகத் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மயிலிட்டித் துறைமுகத்திற்கு இன்று (25) விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், புதிதாக தெரிவு செய்யப்பட்ட கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

அங்கு தரித்து விடப்பட்டுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களின் படகுகளையும் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,

Fisherman 1

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி வந்து சட்டவிரோத தொழில் முறைகளைப் பயன்படுத்துகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்கள் எமது கடற்றொழிலாளர்களின் கடல் வளங்களை அழிப்பதுடன் எமது மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.

இதன் காரணமாகவே, அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகி்றன.

இதுதொடர்பாக கலந்துரையாடுவதற்கு இந்தியத் தூதரகத் தரப்புக்கள் என்னுடன் தாடர்பு கொண்டுள்ளன. கொழும்பு திரும்பிய பின்னர் கலந்துரையாடுவதற்கு சம்மதம் தெரித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

Fisherman 02

அதேவேளை, விடுவிக்கப்படாத மயிலிட்டி வடக்கு, மயிலிட்டி கிழக்கு, மயிலிட்டி தெற்கு, தையிட்டி தெற்கு, பலாலி, மற்றும் வளலாய் போன்ற இடங்களை விடுவித்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை வைத்த நிலையில், கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

குறித்த விடயம் தொடர்பாக ஏற்கனவே ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளதாகவும், எதிர்வரும் தை மாதம் தொடக்கம் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...