இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர்
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கையை மீட்டெடுக்க வெளிநாடுகள் உதவ வேண்டும்! – தூதுவர்களுடனான சந்திப்பில் ரணில் கோரிக்கை

Share

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டெடுக்க வெளிநாடுகள் உதவ வேண்டும் என்று புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ரணில் இன்று பிரதமர் அலுவலகத்தில் கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் ஆகியோர் தனித்தனியாக அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“நாட்டின் நிலைமை மோசமடைவதற்கு முன்னர் பிரதமர் பதவியை நான் பொறுப்பேற்றுள்ளேன். வெளிநாடுகள் இலங்கைக்குத் தொடர்ந்தும் நிதி உதவிகளை வழங்கவேண்டும்; இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும்” என்றும் இதன்போது ரணில் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர்இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்இலங்கைக்கான சீனத் தூதுவர்

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...