காலிமுகத்திடல் பகுதியில் திடீரென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் கனரக வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பலகோணங்களில் தகல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில் தன்னெழுச்சி போராட்டம் தொடரும் நிலையிலேயே இவ்வாறு பொலிஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன.
இன்று 8 ஆவது நாளாகவும் இப்போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment