கைது
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் வாள்வெட்டுக் கும்பலில் ஐவர் வசமாக மாட்டினர்!

Share

வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருட்டு மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தியே இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை நேற்று முன்னெடுத்தனர்.

கடந்த 17ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் சண்டிலிப்பாய் – தொட்டிலடிச் சந்தியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

சம்பவத்தில் அளவெட்டியைச் சேர்ந்த ஏ. ரதீஸ்வரன் (வயது – 37) என்பவர் தலையில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பித்தனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கீழான மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதனடிப்படையில் கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த இருவர், தெல்லிப்பழையைச் சேர்ந்த இருவர் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் என 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் வடமராட்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் திருடப்பட்டவை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...