Parliament of Sri Lanka 04 850x460 acf cropped 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சரியும் பெரும்பான்மை – நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு?

Share

நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சியின் பெரும்பான்மை குறையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் அதை சமாளிக்க நாடாளுமன்ற கூட்டத்தொடரை குறுகிய காலத்துக்கு ஒத்திவைப்பது குறித்து அரசு அவதானம் செலுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் அரசின் முக்கிய வேலைத்திட்டங்கள் இல்லை எனத் தெரிவித்து புதுவருடத்தை முன்னிறுத்தி இவ்வாறு ஒத்திவைக்க முடியுமென அரச உயர் மட்டத்தில் உள்ள சிலர் சுட்டிக்காட்டி உள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் ஆளும் அரசின் பெரும்பான்மையை இல்லாமல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் இதுதொடர்பாக கொழும்பில் உள்ள மூன்று இடங்களில் பேச்சு நடத்தப்பட்டுள்ளன.

தங்களது பெரும்பான்மையை சபாநாயகருக்கு எழுத்து மூலம் காட்டி அரசுககு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு இந்த புரட்சிகர குழு எதிர்பார்த்திருப்பதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பேருந்து கவிழ்ந்து விபத்து
இலங்கை

பேருந்து கவிழ்ந்து விபத்து – மஹகொடையாய பகுதியில் சம்பவம்!

மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று புத்தல –...

ரத்மலானா சைமா
இலங்கை

பேராதனை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார் ‘ரத்மலானா சைமா’

‘ரத்மலானே சைமா’, மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை காவல்துறையினரிடம்...

நிஸ்ஸங்க சேனாதிபதி
இலங்கை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ள நிஸ்ஸங்க சேனாதிபதி!

இன்றைய தினம், எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்....

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...