யாழ்ப்பாணம் – நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தைபோல் தமிழகத்தில் உள்ள ஆலயங்களை நடாத்தவேண்டும் என்று பா.ஐ.க கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த அவர், இலங்கையில் தமிழ்யா பிரதேசங்கள் உட்பட பல்வேடு இடங்களுக்கு விஐயங்களை மேற்கொண்டிருந்தார்.
அவ்வகையில் யாழ்ப்பாணத்திற்கான விஐயம் ஒன்றை மேற்கொண்ட போது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று தரிசனம் மேற்கொண்டு ஆலய நடைமுறைகளை நேரில் கண்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் தமிழகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்படி தெரிவித்தார்.
#IndiaNews
Leave a comment