1 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எரிபொருளுக்காக காத்திருந்த பாரவூர்தியுடன் மோதி முதியவர் பலி!

Share

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் எரிபொருளுக்காக காத்திருந்த பாரவூர்தியுடன் விபத்துக்குள்ளாகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கனகரட்ணம் (வயது-72) என்ற முதியவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் அச்சுவேலி – தெல்லிப்பழை வீதியில் இடம்பெற்றுள்ளது.

அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காகச் சென்ற பாரவூர்தி வரிசையில் நின்று செல்லும் போது, முன்னால் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவரை மோதித்தள்ளியது. அதன்போது, முதியவர் பாரவூர்தியின் சக்கரத்திற்குள் சிக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாரவூர்தி சாரதியை கைதுசெய்துள்ள அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , பாரவூர்தியையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.

அதேவேளை கடந்த வாரம் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவான் பகுதியில் எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையில் நின்ற தனியார் பேருந்து ஒன்றில் பயணித்த பயணி ஒருவர் பேருந்தின் கீழ் இறங்கி இருந்த வேளை, பேருந்தினை சாரதி வரிசையில் முன் நகர்த்திய போது, அதன் சக்கரத்தினுள் சிக்கி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 690416ca1b001
செய்திகள்இலங்கை

வானிலை அறிக்கை: சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையின் சில பகுதிகளில் இன்று (அக்31) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

25 6903a9422debc
செய்திகள்உலகம்

சீனா மீதான வரி 57% இலிருந்து 47% ஆகக் குறைப்பு: ட்ரம்ப் அறிவிப்பு – இரு நாட்டு உறவுகள் குறித்து ஜி ஜின்பிங் உறுதி

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற...

images
செய்திகள்இலங்கை

2024 மக்கள் தொகை கணக்கெடுப்பு: மொனராகலை மாவட்டத்தில் அதிகபட்ச எழுத்தறிவு

மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2024 மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளின்படி, மாவட்டங்களுக்கிடையேயான...

25 6902b801c3b01
செய்திகள்இலங்கை

ஓடுதளம் தேவையில்லாத, AI-இயங்கும் உலகின் முதல் போர் விமானத்தை உருவாக்கியது அமெரிக்கா!

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு தனியார் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய உலகின்...