5 Tourists
இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முயற்சிகள் தீவிரம்!

Share

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வருடத்தில் 10 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவர் என நம்புவதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் .

இந்தியாவிலிருந்து பெருமளவு உல்லாசப் பிரயாணிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர், இந்திய உல்லாசப் பிரியாணிகளுக்காக அதிக வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

யாழ்.பலாலி விமான நிலையத்தின் மூலம் இந்திய யாத்திரிகர்கள் இலங்கைக்கு வருவதற்கு வாய்ப்புகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டுக்கு தினமும் சுமார் 2000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும் அதனை 7000மாக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய உல்லாசப் பிரயாணிகளை அதிகளவில் இலங்கைக்கு அழைக்கும் வகையில் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பயணம் ஒன்றை அமைச்சர் இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....