ஹேமந்த ஹேரத் 4
இலங்கைசெய்திகள்

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றாதீர்!

Share

12 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற வேண்டாம். இது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் 12– 19 வயதுக்குட்பட்ட குறைபாடுகள் உள்ள சிறுவர்களுக்கே தடுப்பூசிகள் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆயினும் ஆரோக்கியமான சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு குறித்து எந்தவித தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை.

ஆரோக்கிய சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும்போது கூடுதல் எச்சரிக்கை அவசியம். அதனால்தான் இது குறித்து வைத்திய நிபுணர்கள் தங்கள் பரிந்துரைகளை முன்வைக்கவில்லை.

ஆகவே ஆரோக்கியமான சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற விரைந்து செல்லாதீர்கள் என தெரிவித்துள்ளார்.

நிலைமைகளை ஆராய்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து வைத்திய நிபுணர்கள் பொருத்தமான பரிந்துரைகள் முன்வைப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...