ff scaled
பொழுதுபோக்குசமையல் குறிப்புகள்

ஈஸியாக செய்யலாம் இறால் ப்ரைட் ரைஸ்

Share

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக் கூடிய உணவு இறால் ப்ரைட் ரைஸ். ஈஸியான முறையில் நீங்களும் செய்து அசத்துங்கள்.

தேவையானவை:

இறால் – கால் கிலோ

பாசுமதி அரிசி – 4 கப்

வெங்காயம் – 4

முட்டை – 4

பூண்டு – 1 அரைத்தது ஒரு கண்டி

கரட் – 1

வெங்காயத்தாள் – சிறிதளவு

மீன் சோஸ் – 1 கரண்டி

சோயா சோஸ் – 1 கரண்டி

மிளகுத்தூள் – கால் கரண்டி

கொத்தமல்லி தழை – 1 கட்டு

 

prawn and egg fried rice 555

செய்முறை:

கொத்தமல்லி தழை, கரட் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
இறாலை சுத்தம் செய்து நன்றாகக் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

முட்டையை அடித்து கலக்கி ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

பாசுமதி அரிசியை உதிரியாக வேக வைத்துக் கொள்ளுங்கள்.

பின் சட்டியில் எண்ணெய் ஏற்றி அது சூடானதும் இறாலை கொட்டி பொன்னிறமாக வறுத்தெடுங்கள். அதனுடன் பூண்டு விழுதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின் கரட்டையும் அதனுடன் சேர்த்து வதக்குங்கள்.

பின் முட்டையையும் ஏற்றி கட்டி பிடிக்காமல் கிளறி கிளறி விடுங்கள்.

நன்கு வெந்து வந்ததும் வேக வைத்த சாதத்தை அதனுடன் கொட்டி கிளறுங்கள்.

இப்போது இதனுடன் சோயா சோஸ், மீன் சோஸ், மிளகுதூள் , வெங்காயம், வெங்காயத் தாள் ஆகியவற்றை போட்டு கலந்து வேகவிடுங்கள்.

வெந்து ப்ரைட் ரைஸ் பதத்துக்கு வந்தவுடன் கொத்தமல்லி தழையை தூவி ஆவி பறக்க இறக்குங்கள்
இப்பொழுது சுவையான இறால் ப்ரைட் ரைஸ் ரெடி.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...