world bank 20220162151
இலங்கைசெய்திகள்

கடன் மறுசீரமைப்பு அவசியம்

Share
இலங்கை மற்றும் ஏனைய நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு விரைவான கடன் மறுசீரமைப்பு தேவைப்படுகிறது என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்தார் என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பெங்களூரு நகரில் இடம்பெற்ற ஜி 20  நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இலங்கையின் நிதி உத்தரவாதம், சாம்பியா புரிந்துணர்வு ஒப்பந்தம், கானா உத்தியோகபூர்வ கடனாளிகள் குழு, எத்தியோப்பியா மறுசீரமைப்பு ஆகிய தீர்வுகளை அடைய நாங்கள் ஒன்றாக பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும்,  உடன்பாடு ஏற்பட்டால் அடுத்த சில மாதங்களில் இவை அனைத்தும் செய்யப்படலாம் என்று தெரிவித்த அவர்,பிரச்சினைகள் மற்றும் நிலைப்பாடுகளை முன்வைக்கக்கூடிய ஒரு செயல்முறையை நாங்கள் கண்டுபிடிக்க விரும்புகிறோம் என்றார்.

பொது கட்டமைப்பின் குறைபாடுகளைப் பற்றி கலந்துரையாடுவதற்கு அரச மற்றும் தனியார் கடன் வழங்குபவர்களின் வட்டமேசை மாநாடு சனிக்கிழமையன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

பாரம்பரிய பணக்கார கடன் வழங்கும் நாடுகள், தனியார் கடனாளிகள் மற்றும் சீனாவை ஒன்றிணைத்து குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் கடன்களை மறுசீரமைக்க ஜி 20 முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...