tamilni 166 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கையை நசுக்கும் கடன்கள் : கவலையில் அம்மையார்

Share

இலங்கையை நசுக்கும் கடன்கள் : கவலையில் அம்மையார்

இரு நிபந்தனைகளுடன் எமது நாட்டிற்கு கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிபந்தனைகள் இலகுவானதாக இருந்த போதிலும் அதனால் நாம் பொருளாதார ரீதியாக நசுக்கப்படுகின்றோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எம்மை நசுக்கி, இல்லாமல் செய்து இந்து சமூத்திரத்தின் மூலோபாய நன்மைகளை பெற்றுக் கொள்ளவே மேற்கத்தைய நாடுகள் முயற்சிக்கின்றன.

தற்போது அந்த நாடுகள் பயன்படுத்தும் மூலோபாயங்கள் முன்னரை விட வேறுபட்டவை. இன்று அவற்றை ஆக்கிரமிப்பு என கூறுவது இல்லை. அதனை கடன் வழங்குதல் என குறிப்பிடுகின்றனர்.

இரு நிபந்தனைகளுடன் கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிபந்தனைகள் இலகுவானதாக இருந்த போதிலும் அதனால் நாம் பொருளாதார ரீதியாக நசுக்கப்படுகின்றோம். அதற்கு மற்றுமொரு பெயரே அபிவிருத்திக்கான முதலீடு.

அபிவிருத்திக்கான முதலீடுகள் இரண்டு வகைப்படும். ஒன்று மிகவும் தாராளமானவர்கள். இந்த தாராளமானவர்கள் அபிவிருத்திக்கு அதிக கடன்களை வழங்கி நாட்டை மேம்படுத்த உதவுகின்றனர். மற்றைய பிரிவினர் எமக்கு தேவையான நிதியை கோரிய உடனேயே வழங்குபவர்கள். இந்த கடனுக்கு அதிக வட்டி வீதம் அறவிடப்படுகிறது. இதன் மூலம் அனைத்தையும் அபிவிருத்தி செய்ய சந்தர்ப்பம் கிடைத்த போதிலும் அவ்வாறான ஒன்று தேவையில்லை.

இதுவே பொருளாதார வங்குரோத்து நிலைக்கு மற்றொரு காரணமாகும். எமது சர்வதேச கொள்கைகளை உருவாக்கும் போது இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச அரங்கில் எமது கோட்பாடுகளுக்கு அமைய ஆற்றல் மிக்க அடையாளத்தை உருவாக்க வேண்டும்.

தேசிய வளங்களையும், பொருளாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும்.எமது கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...