tamilnig 1 scaled
இலங்கைசெய்திகள்

உட்கட்சிப் பூசல்களுக்கு விளையாட்டை பயன்படுத்தக் கூடாது : நாமல்

Share

உட்கட்சிப் பூசல்களுக்கு விளையாட்டை பயன்படுத்தக் கூடாது : நாமல்

கிரிக்கெட் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால் கிரிக்கெட் வீரர்களுக்கே பாதிப்பு அதிகம் என அவர் தெரிவித்துள்ளார்.

தாம் விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் நிர்வாக பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் மற்றும் நிர்வாக பிரச்சினையால் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டை சர்வதேச கிரிக்கெட் பேரவை இடைநிறுத்தியுள்ளது.

இவ்வாறு இடைநிறுத்தப்படுவதனால் வருடாந்தம் கிடைக்கப்பெறும் நூறு மில்லியன் டொலர் நேரடி மற்றும் மறைமுக வருமானத்தை இழக்க நேரிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அரசாங்கத்தின் உட்கட்சிப்பூசல்களுக்கு விளையாட்டை பயன்படுத்தி தீர்வு காண முயற்சிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Missing Persons Nuwara Eliya
இலங்கை

நிலவும் சீரற்ற காலநிலையால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச்...

Displaced
இலங்கை

நுவரெலியாவில் தொடரும் கனமழை – தற்காலிக முகாம்களில் தஞ்சம் கோரிய மக்கள்.

நுவரெலியாவில் சீரற்ற வானிலை காரணமாக, பல தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளதாக...

Ministry of Defence
இலங்கை

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அவசர அறிவித்தல்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தொடர்புடைய அதிகாரிகளுக்கு...

Electricity bills
இலங்கை

மின்சார கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் எவ்வித...