நுவரெலியாவில் சீரற்ற வானிலை காரணமாக, பல தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் முதல், பெய்து வரும் கனமழைக்காரணமாக பல வீடுகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதற்கமைய, நுவரெலியா – சென் அன்றூஸ் பகுதியில் உள்ள 06 வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததன் காரணமாக மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு நுவரெலியா பம்பரகலையில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.