tamilni 161 scaled
இலங்கைசெய்திகள்

தீபாவளி தினத்தில் ஜனாதிபதியின் வேண்டுகோள்

Share

தீபாவளி தினத்தில் ஜனாதிபதியின் வேண்டுகோள்

இருளான யுகத்திலிருந்து மீண்டு, ஒளி நிறைந்த பாதையில் இலங்கை தனது பயணத்தை ஆரம்பித்துள்ள இந்தத் தருணத்தில் நாட்டுக்காகவும், சுபீட்சமாக நாடு மேம்பட வேண்டும் எனவும் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த வாழ்த்துச் செய்தியில்,

உலகெங்கும் உள்ள இந்து மக்களினால் கொண்டாப்படும் பண்டிகைகளில் தீபாவளி முக்கிய இடத்தை வகிக்கிறது. எமது மனதுக்குள்ளே இருக்கும் தீய எண்ணங்களை நீக்கி ஒளியை உதயமாக்கும் இந்துக்களின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எனது வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

விஷ்ணு பகவானால் நரகாசுரன் தோற்கடிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், இந்துக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதோடு, தனக்கு ஞான ஒளி கிட்டியது போல உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒளிகிட்ட வேண்டும் என நரகாசுரன் விஷ்ணு பகவானிடத்தில் வேண்டியதாக கூறப்படுகிறது.

அதை நினைவுகூரும் வகையில், அனைவரது மனங்களிலும் ஒளி பிறக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடனேயே இந்து பக்தர்கள் விளக்கேற்றி சமய வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.

நாடு என்ற வகையில் நாம் கடந்த இரு வருடங்களில் எதிர்கொண்டிருந்த இருளான யுகத்திலிருந்து மீண்டு, ஒளி நிறைந்த பாதையில் இலங்கை தனது பயணத்தை ஆரம்பித்துள்ள இந்தத் தருணத்தில் நாட்டுக்காகவும், சுபீட்சமாக நாடு மேம்பட வேண்டும் எனவும் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள்.

நாட்டில் சுபீட்சத்தின் தீபங்களை ஏற்றி, இலங்கையை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கும், பல்லின மக்களுக்கு மத்தியில் சமாதானம், சகவாழ்வு, நித்திய நல்லிணக்கத்துடன் கூடிய ஆன்மிக வளர்ச்சியை ஏற்படுத்தவும் இந்த தீபாவளி பண்டிகை வரப்பிரசாதமாக அமைய வேண்டும் என நான் பிரார்த்திப்பதோடு அனைவர் வாழ்விலும் இன்பமும் நலமும் உண்டாக பிரார்த்திக்கிறேன்.

இலங்கை உட்பட உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்து பக்தர்களுக்கும் இருளை அகற்றி ஒளி பிறக்க தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...