போரின் பின்னர் வடக்கில் அதிகரிக்கும் உயிர்மாய்ப்புகள்
இலங்கைசெய்திகள்

போரின் பின்னர் வடக்கில் அதிகரிக்கும் உயிர்மாய்ப்புகள்

Share

போரின் பின்னர் வடக்கில் அதிகரிக்கும் உயிர்மாய்ப்புகள்

வடக்கு மாகாணத்தில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தற்கொலை முயற்சிகள் மற்றும் தற்கொலைகள் அதிகரித்து வருவதாகவும் இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றது என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, போருக்குப் பின்னரும் பல்வேறு சமூக நெருக்கடிகளும் பொருளாதார நெருக்கடிகளும் தற்கொலைக்குக் காரணமாக அமைகின்றன.

சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக உளவள ஆலோசகர்கள், மருத்துவ நிபுணர்கள் சிகிச்சையைப் பெற வலியுறுத்த வேண்டும்.

அவ்வாறு பெறமுடியாதவர்கள் ‘அபயம் – 071- 071 2345’ என்ற தொலைபேசி சேவையினூடாகவும் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்கொலை செய்து கொள்பவர் அதனைச் சொல்லமாட்டார் . ஆனால், ஏதோ ஒரு வடிவில் அதனை வெளிப்படுத்துவார்.

நேரடியாக வெளிப்படுத்தாவிட்டாலும் மறைமுகமாக வெளிப்படுத்தியிருப்பார். அதை உணர்ந்து அவர்களுக்கு உளநல ஆலோசனையைப் பெற்றுக் கொடுக்கவேண்டும்.

நண்பர்கள், குடும்பத்தவர்கள் . உறவினர்கள் மூலமே அவர்களை அடையாளம் கண்டு ஏதாவது ஒரு வழியில் சிகிச்சைக்குக் கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...