இலங்கை
குளியலறையில் இருந்த பெண்ணை கைத்தொலைபேசியில் காணொளி எடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது
குளியலறையில் இருந்த பெண்ணை கைத்தொலைபேசியில் காணொளி எடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது
அம்பாறையில் வீட்டொன்றிற்குள் பிரவேசித்து குளியலறையில் இருந்ந பெண் ஒருவரை கைத்தொலைபேசியில் காணொளி பதிவு செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த பொலிஸ் உத்தியோகதத்தர் கைது செய்யப்பட்டள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டு காவலர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் முக்கிய பிரமுகர் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அருகில் உள்ள வீட்டு வளாகத்துக்குள் இரகசியமாக பிரவேசித்து அந்த வீட்டின் குளியலறையில் இருந்த பெண்ணை கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்துக்கொடிருந்த போது பிடிப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியை பொலிஸார் கைப்பற்றியதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அம்பாறை பொலிஸார் வருகின்றமை குறிப்பிடத்தக்கது
You must be logged in to post a comment Login