oSSZSXjXSudkwXaCAzV1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நீரில் மூழ்கி உயிரிழப்பு !

Share

நீரில் மூழ்கி உயிரிழப்பு !

பண்டாரகம மஹபெல்லான கடலில் நண்பர்களுடன் நீராடச் சென்ற 16 வயதுடைய மாணவன் நேற்று பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அலுபோமுல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.

அலுபோமுல்ல மகா வித்தியாலயத்தில் பதினோராம் தரத்தில் கல்வி கற்கும் அலுபோமுல்ல மஹிந்த மாவத்தையைச் சேர்ந்த ஜனிதா நிர்மலா என்ற மாணவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவன் தனது பாடசாலையைச் சேர்ந்த மேலும் நான்கு நண்பர்களுடன் இன்று பிற்பகல் 3 மணியளவில் மஹபெல்லான கடலுக்கு வந்து நீராடிக் கொண்டிருந்த போது அவரது மூத்த சகோதரர் மற்றுமொரு நண்பருடன் வந்து கடலில் நீச்சலடித்து நீராடிய போது அவரை பின் தொடர்ந்து சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கி காணாமல் போன மாணவன் தொடர்பில் அலுபோமுல்ல காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பிரதேசவாசிகளின் உதவியுடன் படகு மூலம் மாணவனை தேடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது நீரில் மூழ்கிய நிலையில் மாணவர் கண்டுபிடிக்கப்பட்டார். மீட்கப்பட்ட மாணவனை வானில் ஏற்றி பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் வைத்தியர்கள் மாணவனின் உயிரைக் காப்பாற்ற முயற்சித்த போதும் மாணவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அலுபோமுல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...