hWcTod5JVNuk5bT3dwTi 1
உலகம்செய்திகள்

வெடித்து சிதறியது உலகின் மிகப்பெரிய ரொக்கெட் !

Share

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய ரொக்கெட்டை ஏவப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறியது.இதில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இதுவரை உலகில் தயாரிக்கப்பட்ட ரொக்கெட்டுகளிலேயே மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ரொக்கெட்டை வியாழன் காலை விண்ணில் ஏவியது.

அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள போகா சிகாவிலிருந்து ஸ்டார்ஷிப் ரொக்கெட் ஏவப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அருகில் இருந்து ரொக்கெட் ஏவுதலை பார்வையிட்டனர்.

ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக வானத்திற்கு எடுத்து செல்லப்பட்ட ரொக்கெட் அமைப்பு திட்டமிட்டபடி பிரிக்கத் தவறியது, மேலும் நான்கு நிமிடங்களுக்குள் அதன் விமானம் வெடித்து சிதறியது, இதனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய ரொக்கெட் அதன் சுற்றுப் பாதையை அடைய தவறிவிட்டது.

அத்துடன், முதல் கட்டத்தை வெற்றிகரமாக தாண்டிய ரொக்கெட், இரண்டாம் கட்டத்தில் தோல்வியை சந்தித்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், பரபரப்பான தொடக்க சோதனை முயற்சிக்காக குழுவை வாழ்த்தினார். அத்துடன் சில மாதங்களில் அடுத்தக்கட்ட சோதனை ஏவுதலுக்காக நிறைய கற்றுக்கொண்டேன் என்றும் வியாழக்கிழமை நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...