Education 2
இலங்கைசெய்திகள்

மாணவர்கள் நலனை கருத்திற் கொண்டு ஒத்துழையுங்கள்

Share

க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பிடும் நடவடிக்கைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் விடைத்தாள்களை மதிப்பிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, ஆகையால், மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு ஆசிரியர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்  சுசில் பிரேம்ஜயந் கேட்டுக்கொண்டார்.

விடைத்தாள்களை மதிப்பிடும் நடவடிக்கைகளுக்காக 20,000 ஆசிரியர்கள் அவசியமாக உள்ள நிலையில், 16,000 ஆசிரியர்களே இதுவரை அதற்காக பதிவு செய்துள்ளனர்.

மேலும் 4,000 ஆசிரியர்களுக்கான குறைபாடு நிலவுகின்றது என்றார்.

பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை  இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில்  எதிர்க்கட்சி எம்பி புத்திக பத்திரண எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே   இவ்வாறு வேண்டுகோள் விடுத்த கல்வி அமைச்சர் மேலும் கூறுகையில்,

அவர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் பிரச்சினைகள் காணப்பட்ட நிலையில் அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவற்றுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு இறுதி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் கொடுப்பனவு வழமையாக வழங்கப்படும் கொடுப்பனவிலிருந்து சுமார் இரண்டு மடங்காக வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...