1746382 srilanka war
இலங்கைசெய்திகள்

பாகிஸ்தான் கப்பலுடன் போர் பயிற்சி? – இலங்கை கடற்படை மறுப்பு

Share

இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் (பி.என்.எஸ்) தைமூருடன் இணைந்து இலங்கையின் கடற்படையினர் போர் பயிற்சிகளை நடத்தவுள்ளனர் என்ற செய்தியை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.

சீனாவில் கட்டப்பட்ட பாகிஸ்தானின் பி.என்.எஸ். தைமூர் என்ற போர்க்கப்பல் கடந்த வெள்ளிக்கிழமையன்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. குறித்த கப்பல் நாளை (15) இலங்கையில் இருந்து புறப்படவுள்ளது.

இந்த நிலையில் இலங்கை கடற்படையும், பாகிஸ்தான் கடற்படையும் கூட்டு போர்ப்பயிற்சி நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

ஆனால் இந்த தகவலை இலங்கை கடற்படை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதேவேளை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டு கடற்படை கப்பல்கள், நாட்டில் இருந்து வெளியேறும் போது இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுபடுவது வழமையான விடயமாகும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது

வங்காளதேசத்தின் சட்டகிராம் துறைமுகத்தில் பாகிஸ்தானின் போர்க்கப்பலை நிறுத்த அந்த நாட்டின் அரசு அனுமதி மறுத்ததால், பாகிஸ்தான் கடற்படையில் இணையும் வழியில் கொழும்பு துறைமுகத்தில் அதை நிறுத்த இலங்கை அரசு அனுமதித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...