வடக்கில் சீனா காலூன்றுவது என்பது மிகவும் சிக்கலான ஒருவிடயம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் கே.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
இந்தியாவைப் பொறுத்தவரைக்கும், சீனாவைக் கையாளக்கூடிய அத்தனை இராஜதந்திரப் பொறிமுறைகளும் இருக்கின்றன. எங்களைப் பயன்படுத்தித் தான் அதனைக் காப்பாற்ற வேண்டும் என்று இல்லை.
ஆனால், இந்தியாவிடம் இந்தக் கோரிக்கை முன்வைப்பதன் மூலம், குறிப்பாக பொருளாதார நெருக்கடி, அரசின் கடும்போக்கு ஆகியவை தொடர்பில் எம்மினத்தைக் காப்பாற்ற வேண்டும். நடைமுறைப்படுத்த வேண்டுமாக இருந்தால் இக்கோரிக்கையை முன்வைத்தேயாக வேண்டும்.
கடந்த காலங்களில் தமிழ் தரப்புக்கள் ஒன்றாக இணைந்து ஒருமித்த கோரிக்கை முன்வைக்காத நிலை காணப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews

