10
இலங்கைசெய்திகள்

பேருந்து கட்டணம் குறைப்பு: வெளியான அறிவிப்பு

Share

பேருந்து கட்டணம் குறைப்பு: வெளியான அறிவிப்பு

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரும் வகையில் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது

அதன்படி, பேருந்து கட்டணங்கள் 4.24 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 28 ரூபாவில் இருந்து 27 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து பேருந்து கட்டணத்தை குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission) தீர்மானித்துள்ளது.

இதன்படி புதிய பேருந்து கட்டண திருத்தம் இன்று அறிவிக்கப்படும் எனவும் ஆணைக்குழுவை மேற்கோள்காட்டி தகவல் வெளியகி உள்ளது.

குறித்த தீர்மானமானது, உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நேற்று (30) நள்ளிரவு முதல் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டதையடுத்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இன்று (1.10.2024) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தும் வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி 332 ரூபாவாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெட்ரோல் லீற்றரின் விலை 21 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 311 ரூபாவாகும்.

அதேபோல், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றரின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 307 ரூபாவாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 24 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 283 ரூபாயாகும்.

352 ரூபாவாக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 319 ரூபாவாகும்.

202 ரூபாவாக நிலவிய மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றில் விலை 19 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 183 ரூபாய் என பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...