20220123 100725 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தேவையற்ற நடமாட்டங்களை தவிருங்கள்! – யாழ் அரச அதிபர் கோரிக்கை

Share

தேவையற்ற நடமாட்டங்களை தவிர்த்து ஊரடங்கு காலத்தில் வெளியில் நடமாடாமல் இருப்பது சிறப்பானது என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

ஊரடங்கு நடைமுறைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று மாலை கருத்து தெரிவித்த போதே அரசாங்க அதிபர் இதனை தெரிவித்தார்.

 

அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்த்து ஊரடங்கு காலத்தில் வெளியில் நடமாடாமல் இருப்பது சிறப்பானது. மிக மிக அத்தியாவசியமான தேவைகள் மற்றும் இதர அத்தியாவசியமான விடயங்களை பொறுத்தவரையில் அவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களுடன் தொடர்பு கொண்டு அதன் ஊடாக கிடைக்கின்ற அறிவித்தலின் படி செயற்படலாம்.

இது தொடர்பாக மேலதிக தகவல்களை உரிய அறிவித்தல்கள் எங்களுக்கு முறையாக கிடைத்த பிற்பாடு பொதுமக்களுக்கு தெரிவிப்போம். அதுவரை பொதுமக்கள் மிகவும் அமைதி காத்து ஊரடங்குச் சட்டத்தை அனுசரித்து நடக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...

j poretest d
இலங்கை

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...

arested 1
இலங்கை

வெளிநாட்டில் இருந்து வருகை தருவோரை இலக்குவைத்து நடத்தப்படும் சம்பவம்.

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....