ponseka
அரசியல்இலங்கைசெய்திகள்

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்! – பொன்சேகா கண்டனம்

Share

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்த நடவடிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

நிராயுதபாணியாக – அறவழியில் போராடிய பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை தாக்கி கலைக்க ஆயிரக்கணக்கான ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டமை ஒரு நாட்டில் ஜனநாயகத்தின் தோல்விக்கு சிறந்த உதாரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ அறவழியில் முன்னெடுக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியை, தாக்கி கலைக்க ஆயிரக்கணக்கான ஆயுதம் ஏந்திய காவல்துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்ட ஒரு நாட்டின் ஜனநாயகம் செயல்படவில்லை என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அமைதியாக போராடியவர்கள்மீது மே 9 ஆம் திகதி வன்முறை கும்பலை ஏவிவிட்டு மஹிந்த ராஜபக்ச தாக்குதல் நடத்தினார். தற்போதைய அரசும் இதே நடைமுறையைதான் பின்பற்றுகின்றது. ” – எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...

Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...