sajith 5
அரசியல்இலங்கைசெய்திகள்

ஆணவபோக்கே அழிவுக்கு காரணம் – சஜித் சீற்றம்!

Share

நாட்டின் ஆட்சியாளர்கள் கடந்த 03 ஆண்டுகளில் மற்றவர்கள் சொல்வதைக் காதில் வாங்காமல், தாங்கள் மட்டும் தான் சரியென்று எண்ணிச் செயற்பட்டமையால் நாடு தற்போது அதள பாதாளத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இதிலிருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து சமூக,பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்குச் செல்ல வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சர்வாதிகாரமின்றி அனைவரது கருத்துக்களுக்கும் செவிசாய்க்கும் சமூக சீர்திருத்தத்தின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியுமெனவும், அதற்காக முற்போக்குக் கட்சிகளின் முன்மொழிவுகளையும் யோசனைகளையும் செவிமடுப்பதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், பன்முகப்படுத்தப்பட்ட யோசனைகளை ஒன்றிணைக்கக்கூடிய பொதுவான தேசிய நிகழ்ச்சி நிரலின் மூலம் இறுதியில் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதே எதிர்க்கட்சியின் நோக்கமாகுமெனவும் அந்த நிகழ்ச்சி நிரலினூடாக நாட்டு மக்கள் இழந்த மூச்சை மீண்டும் வழங்க முடியுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெலிக்கடை சிறைக்கைதி மரணம்: மூன்று சிறைக்காவலர்கள் கைது; நீதிமன்றில் ஆஜர்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதுடைய கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக,...

world 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாலத்தீவு – இலங்கை இடையிலான வரலாற்றுப் பிணைப்பு: ஜனாதிபதி மாளிகையில் டாக்டர் முகமது முய்ஸு உரை

மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு மற்றும் முதற்பெண்மணி சஜிதா முகமது ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

world 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகள்: 37 சீன நாட்டவர்கள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதற்காகவும், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் பாதுகாப்புப் படையினரால்...

world 19
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – இந்தியா இடையே தரைவழி இணைப்பு: தயக்கங்களை கைவிட வேண்டிய தருணம் என இந்திய உயர் ஆணையர் பேச்சு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைவழிப் பாலத்தை அமைக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கையிலுள்ள இந்திய உயர் ஆணையர்...