Harin Fernando
அரசியல்இலங்கைசெய்திகள்

225 பேரும் பொறுப்பு கூறவேண்டும்!

Share

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகள் அதனை மேலும் உக்கிரமடைய செய்வதாகவே அமைந்துள்ளது என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாட்டில் ஐந்து விடயங்களை வைத்தே ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேரும் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எரிபொருள் நெருக்கடி, எரிபொருள் தொடர்பான ஊழல் மோசடி, 2019ஆம் ஆண்டுக்கு முற்பட்ட சூழல் மற்றும் தேர்தல் ஆகியவையே அவை என்றும் சுட்டிக் காட்டிய அமைச்சர், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இவற்றுக்குப்பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை, கத்தோலிக்க சமூகத்தினரின் பிரதான குற்றவாளியாக கருதப்படும் தரப்பினருடன் எதிர்க்கட்சி தலைவர் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் தலைவர் தோல்வியடைந்துள்ளார் என்பதற்காக நாடு தோல்வியடைய இடமளிக்க முடியாது என்பதற்காகவே மூன்று மாத கால அடிப்படையில் அமைச்சுப் பதவிகளை தாம் பொறுப்பேற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...